நூன்முகம் அன்புடையீர், நலம் பல. ஸ்ரீ குரு ராஜர் தன்னருளால் இன்று ஸ்ரீ அப்பண்ணாச்சாரியார் அருளிய “ஸ்ரீ பூர்ண போத” எனத் துவங்கும், “ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்திரம்” தமிழில் சீரிய முறையில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவருகிறது. சமஸ்கிருத மொழி உச்சரிப்பில் தவறு நேர்கின்ற போது மந்த்ரஹீனம் ஏற்படுகிறதே என வருந்தும் மொழியறியா தூய பக்தர்களுக்காகவே முறையான தமிழில், தெளிவான முறையில், அழகான வடிவோடு, இன்று ஸ்ரீ ராகவேந்திர ஸ்தோத்திரம் வெளிவருகிறது.
இந்த முயற்சிக்கு முழு முதற் காரணம் பிரதி வியாழக்கிழமை தோறும், ஜெயா ப்ளஸ் சேனலில் ஒளிபரப்பான “ஸ்ரீ ராகவேந்திர விஜயம்” தொடரின் இயக்குனர் திரு. D MAG. சரவணன் அவர்களே. இவர் காட்டிய வற்றாத ஆர்வமே இந்த நூல் உருப்பெறக் காரணமாய் அமைந்தது. பல்வேறு இடங்கட்கு, படப்பிடிப்புக்காகச் செல்லும் போது, பல துறைகளைச் சேர்ந்த ஸ்ரீ ராகவேந்திர பக்தர்கள், அவரிடம் விடுத்த வேண்டுகோள், அவருடைய அயரா உழைப்பின் காரணமாக வடிவம் பெற்றது.
ஸ்லோகங்கள் வரி பிறழாமல் செம்மையாக இருப்பினும் பக்தி பிரிப்பதில் நூலுக்கு நூல் எண்ணிக்கை வேறுபடுகிறது. சில பிரதிகளில் 32 பத்தி எனவும் சிலவற்றில் 33 எனவும், சில 35 சில 36 எனக் காணப்படுகின்றன. எனவே பக்தர்கள் பத்திகளின் எண்ணிக்கை குறித்துக் கவலைப் படவேண்டாம். மூல ஸ்லோகத்தின் வரி வடிவம் ஒரு எழுத்துக் கூட மாறவில்லை என்பதே சிறப்பு. அநு ராகவேந்திர ஸ்தோத்திரத்தின் முதலிரு வரிகளான “பூஜ்யாய ராகவேந்திராய” என்ற இரு வரிகள் மட்டுமே ஸ்ரீ அப்பண்ணாச்சாரியாருடையவை. அடுத்து வருபவை ஸ்ரீ யோகீந்த்ர தீர்த்தர் அவர்களால் எழுதப்பட்டவை எனவும் ஒரு குறிப்பு காணப்படுகிறது.
எனவே ஸ்ரீ அப்பண்ணாச்சாரியாரால் அருளப்பட்ட ஸ்லோகங்களின் தமிழ் வடிவை ஒரு பகுதியாகவும், ஸ்ரீ குருயோகீந்த்ர தீர்த்தர் அருளிய “துர்வாதி” எனத் துவங்கும் பாடலின் தமிழ் வடிவை அடுத்தும் சேர்த்துத் தந்துள்ளோம். இரு பெரும் மஹான்களின் ஸ்தோத்திர வடிவில் நமக்கு அருளிய வரமே இந்த துதி மனதாரத் துதிப்போம். அன்புடன் துதிப்போம். பொருள் உணர்ந்து துதிப்போம். ஸ்ரீ குரு ராகவேந்திர ஸ்வாமிகள் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.
அன்புடன் : இராம. பிரபாகரன், வேலூர்
குறிப்பு : ஜகத் குரு ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளின் அத்யந்த பக்தர் திரைப்பட நடிகர் திரு.B.R.இளவரசன் அவர்கள் ஸ்தாபகராக சேவையாற்றும் தேனீ, அகமலை சமத்வ ராயர் ஆலய சன்னதியில் 2019 பங்குனி உத்ர திருநாள் வைபவத்தில் மறுபதிப்பு வெளியிடப்பட்டது.
காப்பு அலையாலும் கங்கைநிகர் அழகான துங்கை நதி அருகாளும் மாஞ்சாலியே அமுதான தமிழோடு அருள்ராஜர் புகழ்பாட அருள்வாய் எம் பூஞ்சோலையே கலையாளும் விதியாளும் அருளோடு எமையாளும் வனதேவி மாஞ்சாலியே கருணைமொழி குருராஜர் துதிபாட துணையாக காப்புனது அடிமாலையே
பாதபங் கஜம்ருத்திகை அணியும் சுகதேக பக்தர்கள் எவரெவர்களோ பாதபங் கஜமகிமை அருள்தேனை பருகிமகிழ் பாவனர் எவரெவர்களோ பாதபங் கஜசரிதம் நாவாரச் சொல்லி மகிழ் பரமபா வனரெவர்களோ ஆதலால் அவர்களின் தரிசனம் எழுபிறவி பாவமும் சாம்பலாக்கும்.
புண்ணியத் தலங்களின் யாத்திரை பலன்களை அடையவோர் வழியைத்தேடி விண்புகழ் ப்ருந்தா வனந்தன்னை வலம்வர வந்தது சாயுஜ்யமே புண்ணியத் தீர்த்தங்கள் நீராடும் பலன்தேடி பொருந்தினேன் பிருந்தாவனம் நண்ணினேன் அபிஷேக தீர்த்தத்தை தலைமீது அணிந்து நான் பேறு பெற்றேன்.
புண்ணியத்…
இசை
நீதிக்கு மாறாத என்னாசை எல்லாமும் நிறைவேற நமஸ்கரித்தேன் பாதிக்கு மேல்வந்த பாவங்கள் விட்டோட பிருந்தாவனம் பார்க்கிறேன் ஆதிக்கும் எட்டாத சாத்திர ஞானங்கள் அருளதாய் நான் சார்கிறேன் சோதியாய் நீதியாய் சுடர் உங்கள் திருநாமம் சொல்லி நான் கரைசேர்கிறேன்.
நீதிக்கு…
இசை
அடிகாண முடியாத சம்சார சாகரம் அது தொடர் பாசபந்தம் அடிமீள முடியாத தொடர் காமக்ரோதங்கள் அலையாலே தொடரும் சொந்தம் மிடி மீள முடியாத துயரங்கள், துன்பங்கள் மீளவோ வழிகள் இல்லை அடி சேர்கிறேன்ராக வேந்த்ரனே சத்குரு அடியனைக் காத்தருள்வாய்.
பலமுறை சொல்வதால் பார்வை வரும் செவிடனும் பாடல்கள் நின்று கேட்பான் குலமுறை பேசவும் கூடாத மூங்கையும் கூடிநலம் பேசி மகிழ்வான் சிலகுறை பெருபுலன்கள் சீராகி நீர்வழியில் சென்றிடும் உலகு வெல்லும் நிலைராக வேந்திரர் புகழ்பாடும் இத்துதிகள் நிலையான புகழதாக்கும்.
கனிவான பணிவோடு கால்ஊன மானாலும் கருத்தோடு பிருந்தாவனம் அநுஸ்தோத்திரம் சொல்லி அன்பாக வலம்வந்து அவன் நமஸ்காரம் செய்தால் மணியான வாழ்வுவரும் மறுபடிநடக்க வரும் மண்மீது புனிதனாக்கும்.
கனிவான…
இசை
சந்திர கிரஹணமும், சூரிய கிரஹணமும் ஞாயிறும், பூசமீனும், சந்தியாகாலமும், சேர்ஜென்ம நக்ஷத்ரம் வைத்ருதி யோக நாளும் சந்திர அமாவாசை, பௌர்ணமி, மகோதயம் அர்த்தோதய சமயமும் சிந்திக்கும் ஸ்ரீராகவேந்திரர் ஸ்தோத்திரம் நூற்றெட்டு முறைகள் சொன்னால் வந்திக்கும் இவ்வுலகு பூத பைசாசங்கள் வாராது விட்டு விலகும்.
சந்திர…
இசை
ஸ்ரீராக வேந்திரர் பிருந்தாவனத் தருகில் ச்ரத்தையும் பக்தியோடும் ஸ்ரீராக வேந்திரர் ஸ்தோத்திரம் சொல்லியே தீபங்கள் ஏற்றிவைத்தால் ஸ்ரீராக வேதமும் சாஸ்த்திர ஞானமும் சத்புத்ர பேறும் சேரும் ஸ்ரீராக வேந்திரர் ஸ்தோத்திரம் வாதிடும் பேர்களை வெற்றி கொள்ளும்.
ஸ்ரீராக வேந்திரர்…
இசை
பரிசுத்த ஞானமும் பக்தியும் வைராக்ய பாவமும் நிலையதாகும் பரிவாளுமா என்ற ஐயமே வேண்டாம்நல் பக்திக்கு இதுசாத்தியம் பரிவோடு குருராஜர் கருணை காக்கும் அதே பாக்கியம் ஐயமில்லை.